பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மகன் கிடைத்தான்; மகிழ்ச்சிதான்; அதனால் இளமை ஆறிவிடுவது இல்லை; அது சீறிக் கொண்டுதான் இருக்கும். அதே நீர்த்துறை: வரும் போதே பூக்களின் மணம் வீசி அவனைக் கவர்ந்து இழுத்தது. இந்தப் பரிமளம் யார்? அவளைக் கண்டான்; மது உண்ட மந்தியாக மயங்கிச் சுழன்றான். அவள் படகோட்டியின் மகள்; மீன்பிடிக்கும் தொழில்; இவன் அரசன் மாமன்னன். இந்த பேதங்கள் வருணங்கள் தொழிலால் அமைந்தவை; பேதம் பாராட்டுவது மடமை. அவள் அவனுக்குத் தேவைப் பட்டாள்; அவன் அவளுக்குத் தேவைப்படவில்லை. அவள் அறிவாளி; அதனால் அவசரப்படவில்லை. பெரியவர்களைக் கேட்கவேண்டும் என்று திசை மாற்றி விட்டாள்;