பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அந்தப் படகோட்டி நாடக வசனம் பேசினான்; 'மீனவன் மகள் என்றால் ஏன் எவன் என்று கேட்காமல் இருக்க முடியாது; அவள் அவன் இச்சைக்கு இசைவு தரவேண்டுமா?" பச்சையாகச் சொன்னால் அது தகாத உறவு. அணைப்புக்கு அவள் தேவைப்பட்டால் பிறக்கும் மகனுக்கு மகளுக்கு அவர்கள் நிலை என்ன? 'என் பேரன் மறுபடியும் ஒரு பரதனாகப் பிறப்பதை விரும்ப மாட்டோம்; அவன் ஆட்சிக்கு வர வேண்டும்' என்று படகோட்டி நிபந்தனை வைத்தான். 'ஏன்'டா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? எந்தப் பெண்ணையாவது காதலித்தாயா?" என்று கேட்க வேண்டிய தந்தை மகன் முன் தலை குனிந்து நின்றான்.