பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தந்தை முந்திக் கொண்டான்; அவன் பசிக்குச் சோறு போட மகன் பட்டினி கிடக்கத் துணிந்தான்; இது சரித்திரம் காணாத தியாகம், பேராண்மை. விரதத்துக்காகச் சிலர் காவி கட்டிக்கொண்டு காரிகையைத் தொடாமல் தனியர் ஆவது உண்டு; அதைத் தொடர முடியாமல் விசுவாமித்திரர்களாக மாறி மேனகைகளுக்கு மயங்கி விழுவதும் உண்டு. தவத்திற்காக அல்ல; ஞான நிலையின் முதற்படி என்பதால் அல்ல; தந்தைக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட மாவீரன் அவன்; யயாதி என்ற மன்னனுக்குத் தன் இளமையைத் தந்த தனயன் ஒருவன் இவன் முன்னோன் உளன்.