பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 போட்டால் தானாக ஆறிவிடும். இது அரசுகள் கடைப் பிடிக்கும் வழி: அந்த நேரத்திற்கு அவர்களைச் சமாதானப் படுத்துவது தேவைப்பட்டது. வீடுமன், விதுரன் மற்றுமுள்ள பெரியோர்கள் அந்தக் கருத்தை ஆமோதித்தனர். உறுதி கொண்ட நெஞ்சோடு பாண்டவர்கள் வெளியேறினர். ஆளுக்கு ஓர் சூள் உரைத்துச் சென்றனர். 'துரியன் குருதி கொட்டச் சாவது: எந்தத் தொடையில் தன்னை இருத்துவேன் என்று ஆசை உரை - பேசினானோ அதில் எழும் குருதி கொண்டு தன் விரித்த கூந்தலை முடிப்பது' என்று சபதம் செய்தாள். துருபதன் மகள் திரெளபதி