பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 'துரியனைத் தன் கதையில் தாக்கி அவன் கதையை முடிப்பதாக" வீமன் சூள் உரை செய்தான். கன்னனுக்கும் அருச்சுனனுக்கும் தீராப்பகை அவனைத் தீர்த்து முடிப்பதாகப் பார்த்தன் சூள் உரைத்தான். நகுலன் சகுனியின் மகனைச் சாத்துவதாக உரைத்தான்; சகாதேவன் சகுனியை முடிப்பதாக முடிவுரை கூறினான். தருமன் மட்டும் மனம் சலியாமல் இருந்தான்; தாழ்விலும் உயர்விலும் அவன் சமநிலை கடைப்பிடித்தான். அவனால் பகை காட்ட முடியவில்லை; அவன் தனிப்பட்ட எவரையும் குறை கூறவில்லை. 'சூழ்நிலைகள் தாம் மனிதர்களைக் கெடுக்கின்றன; அவை மாறினால் திருந்துவார்கள்' என்பது அவன் நம்பிக்கை.