பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 இழந்த நாட்டைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்ற பதற்றமும் அமையவில்லை. அடுத்தது என்ன செய்ய வேண்டும்? காடு ஆயினும் நாடு ஆயினும் அவனுக்குச் சமமாகவே இருந்தது. எதிரிகள் மாற்றார்கள் அல்லர் உறவினர்கள்; உடன் வளர்ந்த சகோதரன்மார்கள்; தந்தை திருதராட்டிரனை அவன் பெரிதும் மதித்தான்; 'விழி இல்லாத குறை: அதுதான் அவன் செயலுக்குக் காரணம்' என்று அமைதி கண்டான். 'கண்ணில் கைபட்டால் கையை யாரும் குறைப்பது இல்லை. அதனால் தம்மைத்தாமே அழித்துக் கொள்வது கூடாது' என்பது அவன் எச்சரிக்கையாய் இருந்தது.