பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 4. காடுறை வாழ்க்கை ஏன் இவர்களைக் காட்டுக்கு அனுப்பினர்? திரெளபதி துருபதன் மகள்: அவள் நினைத்தால் தந்தை சேனைகளை அழைத்து வந்து படையோடு வந்து தாக்கலாம். மற்றும் கண்ணன் அவர்கள் சகாயன்; இவர்கள் நல்ல காலம்; அவன் துவாரகை சென்றிருந்தான்; அதனால் தப்பித்தார்கள். அவன் இருந்திருந்தால் இவர்களைச் சூதாட விட்டிருக்க மாட்டான். தடுத்து நிறுத்தி இருப்பான். தக்க துணைவன் தடுக்கப் பக்கத்தில் இல்லாவிட்டால் மிக்க அரசர்களும் தடுக்கி விழுவர். பாண்டவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள்; அவர்களை