பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 குந்தி முதியவள், அவள் தேவை இல்லை; அரண்மனை வாசம் அவளுக்குச் சுகவாசம், மற்றும் உற்றார் உறவினர் சொந்தம் பந்தம் - இவை அவளுக்குத் தேவைப்பட்டன; தாயை அவர்கள் அலைக்கழிக்க விரும்பவில்லை அவர்களுக்கு உடன்வரத் துணை திரெளபதி இருந்தாள்: அதனால் குந்தி அத்தினாபுரியில் தங்கி விட்டாள். அருச்சுனன் தவயாத்திரை வியாசர் அவர்கள் பாட்டனார் ஆவர்; இவர்கள் பிறப்புக்கே வித்தாக விளங்கிய வித்தகர்; இவர்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர். படைகொண்டு தாக்கினால்தான் தக்க விடைகாண முடியும் படைக் கருவிகள் தேடி வர அவர்களைப் பயணப் படுத்தினார்