பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கயிலை மலைக்குச் சென்று சிவனாரை வேண்டி பாசுபத அத்திரம் வாங்கிவர அருச்சுனனை அனுப்பினார். அது கடுந்தவம். தவம் செய்வார்க்கு வரம் அளிப்பது ஈசன் கடமை என்று கருதப்பட்டது. வரம் பெற்றவர்கள் பலர் அசுரர் ஆகிவிட்டனர். தேவைக்கு மேல் அதிகாரம் வன்மை பெற்று விட்டால் மனித இயல்பு கெட்டு விடுகிறது; அவர்கள் அசுரர் ஆயினர். வரம் பெற்ற கதைகள் பல அவன் கேட்டு அதனால் தானும் செல்வது என அருச்சுனன் முடிவு செய்தான். காடு என்றால் அங்கே விலங்குகள் வாழ்ந்ததோடு அவர்களோடு தவசிகளும் அங்கங்கே குடிசைகள்