பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 உணவு, உறக்கம் இன்றித் தாம் கொண்ட கொள்கையில் அவற்றைத் தேடலில் நாள் பல கடத்தினர். ஞான நெறி என்பது மற்றவர் சொல்லி வருவது அன்று; அவர்களே தம்மைத் தாமே வினவிக் கொண்டு தான் யார்? தன் உள்ளம் யாது? இந்தப் படைப்பின் தன்மை யாது? என்று ஆராய்வதே ஞான நெறி எனக் கருதப்பட்டது. இப்படி ஞானம் தேடி மனத்தை அடக்கி ஆசைகள் நீங்கித் தன்னடக்கம் கொண்டால் அது புலனடக்கம்; அதுவே அவர்கள் மாபெரும் சாதனை ஒரு சிலர் சிவனை வேண்டிப் பேறுகள் பெற்றனர்; அவற்றிற்கு வரம் என்று நவின்றனர்.