பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அர்ச்சுனன் தவம் செய்து பாசுபத அத்திரம் பெறக் கயிலை நோக்கிச் சென்றான் அங்கே கடுங்குளிர். அன்ன ஆகாரம் இன்றிக் காய் கிழங்கு இவற்றைப் புசித்து உடம்பை வாட்டிக் கொண்டு கைகளை உயர்த்தி வைத்துக் கண்மூடிக் கிடந்தான்; பாவம் பரிதாபமான நிலை; அவனுக்குச் சோதனைகள் தோன்றாமல் இல்லை; அர மகளிர் அங்கு நீராட வந்தனர்; அவன் முன்பு அவர்கள் மேனகை யாயினர். அவன் அவர்களைப் பொருட்படுத்தவில்லை இந்திரன் அவர்களை அனுப்பி வைத்தான் என்பது கதை. பார்வதியும் பரமசிவனும் பக்தன் இவன் படும் துன்பம் கண்டு அருள் செய்ய அங்கு