பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 வந்து சேர்ந்தனர். குறவனும் குறத்தியாக, இல்லை; வேடுவனும் வேட்டுவச்சியாக, அங்கே ஒரு கடும் பன்றி அருச்சுனனைக் குத்த வேகமாக வந்தது. வேடுவனும் வேடுவியுமாக வந்த அவர்கள் அதனைக் கண்டனர். அதே சமயம் அருச்சுனனும் கண் விழித்துப் பார்த்தான்; அவன் கைவில் எடுத்தான்; யார் எய்திய அம்பு அந்தப் பன்றியைக் கொன்றது? அது குறித்து வாதம் எழுந்தது. இவர்கள் இருவரும் வாய்ச் சண்டை முற்றிக் கைச்சண்டைக்கு மாறி நின்றனர். விசயன் வில்வித்தை அறிந்து வியந்த ஈசன் அவனுக்குத் திருக்காட்சி நல்கி கேட்ட பாசுபத அம்பினை அவனுக்கு தந்து அனுப்பினான்; இது அதைப் பற்றிய கதை.