பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இந்திரன் அழைப்பு அத்திரம் பெற்ற அவன் தனித்திறம் பாராட்ட இந்திரன் அவனுக்கு அழைப்பு விடுத்தான். அங்கே அவனுக்கு விருந்து தந்து சிறப்பித்தான். அந்த விருந்தில் ஊர்வசி ஆடினாள்; அவன் அவள் நாட்டியத்தைக் கண்டு பாராட்டினான் அதில் அவள் உச்சி குளிர்ந்தாள். பின் நச்சி அவனை அடைந்து கூடி மகிழ விரும்பினாள்; அவன் மறுத்துவிட்டான். அவனைப் "பேடு ஆகுக' என்று சபித்தாள்; இந்திரன் இடையிட்டு "வேண்டும் போது ஆகுக' என்று அவள் வாயில் திருத்தம் பெற்றான். வீமனின் பாதயாத்திரை விண்ணினின்று ஒரு பொற்பூ மண்ணில்