பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 விழுந்தது; அதைக் கண்டாள் திரெளபதி ஒரு பூ அவள் கைக்கு வந்தது அது அவள் ஆசையைக் கிளறியது; மேலும் பூக்கள் சிலவிரும்பினாள். வீமன் அது அறிந்தான்; எங்கிருந்தாலும் கொண்டு வருவதாக வார்த்தை தந்தான். 'விண்ணுலகத்தில் கிடைக்கும் பூ அளகாபுரியிலும் உள்ளது' என்று கேட்டுத் தெரிந்தான். இமயம் நோக்கி அவன் பயணப்பட்டான்; வழியில் அனுமன் அங்கே மூத்து முதிர்ந்து உயிர் விடாமல் உலகில் உழன்று கொண்டிருந்தான்; சீதையின் வாழ்த்தால் தான் சிரஞ்சீவியாக வாழ்வதைத் தெரிவித்தான். 'அனுமனும் வாயுவின் மகன். இவனும் அவனுக்கு மகன்' என்று சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறான்.