பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இருவரும் கலந்து உரையாடினர்; வரும் பாரதப் போருக்கு அனுமன் அருச்சுனன் கொடியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அளகை நகர் சென்று காவல்மிக்க குளத்தில் தாமரைப் பூ அது பொற்றாமரை அவற்றைக் கேட்டுப் பறித்துக் கொண்டு குபேரனோடு நல்லுறவு வைத்துக் கொண்டு காடு திரும்பினான். சடாசுரன் வதை இந்தக் காலத்தில் பெண் தனியே போவது ஆபத்து: சங்கிலி அறுப்பு, கற்பு அழிப்பு இந்தச் சங்கதிகள் அந்தக் காலத்திலும் இருந்தன. சடாசுரன் என்ற கொடியவன் ஒருவன்