பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 திரெளபதியைக் கைப்பிடித்து இழுத்தான் அங்கே தம்பியர் நகுலன் சகாதேவன் கண்டு தடுத்தனர்; பயனில்லை. திரும்பி வந்த வீமன் இதைக் கண்டான் அவ்வளவுதான் அவன் சமாதியாயினான் நல்லது பொல்லது இப்படிப் பல அனுபவங்கள் அவர்களை அவ்வப்பொழுது சந்தித்துக் கொண்டிருந்தன. துர்வாசர் வருகை ஒரு புதிய சோதனை: அந்தக் காலத்தில் முனிவர் வருகை என்றால் அது மகிழ்வுக்கு உரியது. ஒரு சிலர் வருகை பூகம்பத்தை உண்டாக்கியது தவசிகள் அவர்கள் மனத்தை அடக்குகிறார்கள்; அவை வெடிமருந்து போல் சிலசமயம் வெளிக் கிளம்பும் போது எரிமலை ஆகி விடுகிறது.