பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அவன்தான் செல்ல வேண்டும்; அரசன் மூத்து முதிர்ந்தவன். 'தேர் ஒட்டும் ஆள் இல்லை; போருக்குப் போக இயலாது” என்று சாக்குக் கூறினான். "ஆடத் தெரியும், கூடம் போதாது' என்றாளாம் ஒரு நாட்டியக்காரி; அந்த நிலை அவனது: சமயம் அறிந்து பேடி வெளிப்பட்டுத் 'தேர் ஓட்டத் தனக்குத் தெரியும்; ஏற்க' என்றான். தேரில் அருச்சுனன் அமர்ந்தான்; உத்தரன் கடல் போன்ற சேனை கண்டு உடல் நடுங்கினான். தேரைவிட்டு அவன் ஊரை நோக்கி ஒடத் தொடங்கினான் அவனைக் கட்டிப்பிடித்துத் தேரில் அமர்த்தினான்; தான் ஒளித்து வைத்த