பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 வில்லும் அம்பும் மரத்தின் பொந்தில் இருந்து எடுத்து வந்தான். களத்தில் பகைவர்களைச் சந்தித்தான்; இவன் அம்பு அவர்களை அலர வைத்தது. கன்னன் தக்க படைக் கருவிகளோடு களத்திற்கு வரவில்லை. அருச்சுனன் தன்னை எதிர்ப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை; துரியன் அருச்சுனன் முன் நிற்க முடியவில்லை; அனைவரும் தோற்றுப் பின் ஓடினர். பசுக்களை மீட்டுக் கொண்டு நகர் சேர்த்தான். அரசன் தம் நகரில் அரண்மனையில் இருந்தவர்கள் பாண்டவர்கள் என்பது அறிந்து உயர் பேறு எனக் கொண்டு மகிழ்ந்தான்; அவர்களுக்குச் சிறப்புச் செய்தான்.