பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 "அவசரப்பட்டு அவர்கள் வெளிவந்து விட்டனர்" என்று சட்டம் பேசினான் துரியன் அத்தினாபுரியில்; வீடுமன், 'நாள் முடிந்தது: அவர்களுக்கு வெளிவர உரிமை உண்டு' என்று கணக்கிட்டுக் காட்டினான். கீசகன் வதம்: அதைச் செய்த இவர்கள் பாண்டவர்கள் என்பதை அறிந்து அரசன் வருந்தினான் 'தவறு இழைத்தவன் தண்டிக்கப்பட்டான்' என்று நீதி கூறிக்கொண்டு ஆறுதல் பெற்றனர். உத்தரன் தங்கை உத்தரை அவளை அருச்சுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தனர். விராடன் நகரில் இருப்பது தகாது என்று அவர்கள் தனித்து ஒதுங்கினர்;