பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 161 உபப்பிலாவியம் என்னும் புதிய ஊர் அருகு இருந்தது: அதனை உறைவிடம் ஆக்கினர் கண்ணன் அங்கு வந்து அவர்களோடு கலந்து உரையாட வந்தான். 6. துாது உரைகள் அடுத்தது யாது? விடுத்தது திரும்பப் பெறுவது; சூதில் இழந்த சொத்து அதைத் திரும்பப் பெற வழிகள் இரண்டே இருந்தன; 'ஒன்று சூதுபோர்; மற்றொன்று மோது மோர்' என்று பேசினர். பலராமன் வழக்குப் பேசுவதில் பழக்கமானவன். 'அடிப்பட அவர்கள் ஆண்டு பன்னிரண்டு ஆண்டனர்; ஆட்சி அவர்களைச் சார்ந்தது; திரும்பப் பெற இயலாது" என்று சட்ட நுணுக்கம் கூறினான். சாத்தகி கண்ணனின் தம்பி; அவன் அதைக் கடிந்து உரைத்தான்; வெள்ளை நிறத்தவன் பலராமன்;