பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அவன் அறிவும் வெளிறு என்றும், படிறு என்றும் உரைத்தான். கண்ணன் இடையிட்டான்; "எதற்கும் தூது அனுப்பிக் கேட்டு வரல் வேட்கத் தக்கது' என்று கருதித் தன் கருத்து உரைத்தான். உலூகன் என்னும் புரோகிதன் ஒருவன் பொது இருவருக்கும்; இசைந்தான்; அவனைத் தூது அனுப்பினர். உலூகன் தூது உரை 'நாடு கேட்கின்றார்கள் அதற்கு நயமான உரை நல்குக' என்று தெரிவித்தான். "விசயனும் வீமனும் மாவீரர்கள்; அவர்களை வெல்வது அரிது' என்று விளைவினையும் உரைத்தான். கன்னன் எழுந்தான் அதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாடு கிடக்கட்டும் 'பீடு அது முதலில் உறுதியாகட்டும் வீரர்கள் யார்? அதனை நிறுவப்