பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 போர் தொடுப்போம் என்று அவன் தன் பெருமை தோன்றக் கூறினான் துரியன் கன்னன் கூறியதை ஆமோதிதான்; என்றாலும் வீடுமனும் கிருபனும் விதுரனும் "அது கூடாது' என்றனர். 'கன்னன் வாய்ச்சொல் வீரன், வாய்ப்பு வந்த போதெல்லாம் தவறவிட்டவன். அவன் உரை வீண் உரை" என்று மாண்புடன் பேசினர். “நகம் மழுங்கிய கிழட்டுப் புலிகள்' என்று கன்னன் அவர்களைச் சாடினான். வாசுதேவனை அழைத்தது போர் என்பது உறுதி ஆயிற்று கண்ணனைத் தன்பால் அழைப்பது என்று இருசாராரும் திட்டம் இட்டனர் துவாரகையில் கண்ணன் துயில் கொண்டிருந்தான்; அவனைத் தட்டி எழுப்பாமல் தலைமாட்டில் துரியன் அமர்ந்திருந்தான்;