பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அடுத்து வந்தவன் அருச்சுனன்; அவன் கண்ணனின் கால் மாட்டில் அமர்ந்து கொண்டான். கண்ணன் ஆடிய நாடகம் அது; துயில்பவனைப் போல் அவன் பாவனை செய்திருந்தான். விழித்து எழுந்து வீரன் அருச்சுனனைக் கண்டு பேசிப் 'பாண்டவர் சகாயன் தான்' என்பதைத் தெரிவித்தான் உறுதி செய்தான். அடுத்துத் துரியன் தான் முதலில் வந்ததாக முறைமை தெரிவித்தான். 'முதன்மை அவனுக்கு வாய்த்தது; வழி?" என்று அவனை விளித்தான். 'உம் சேனைகளை எனக்கு உதவுக' என்று வினவினான். கண்ணன் தர இசைவு தந்தான்.