பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சாதனை தனது' என்று துரியோதனன் மகிழ்வுடன் திரும்பினான்; விசயன் மனநிறைவோடு நாடு திரும்பி நன்மை தெரிவித்தான். சஞ்சயன் தூது உலுகன் வந்து போனது திருதராட்டிரன் அறிந்தான் 'போரைத் தவிர்க்க வழி? அதற்கு ஒரு தூது அனுப்புவது தக்கது' என்று கருதினான் சஞ்சயன் ஞான முனிவன் அவன் அறிவுரை பாண்டவர் கேட்பர் அந்த நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தத்துவ போதனைகள் அதில் அவன் வித்தகன்; பாண்டவரைச் சந்தித்தான். மாண்தவம் அதன் சிறப்பினைத் தெரிவித்தான்; 'அரச வாழ்வு சுமை; தவமே மேன்மை;