பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அவனைக் கொன்று விடுவது அடுத்த செய்கை, மூன்றாவது திரெளபதி விரித்த கூந்தலை முடிக்க வேண்டும்; இது மிக எளிது. கூந்தல் இருந்தால்தானே முடிப்பு என்பது தேவையாகிறது: அதைக் களைந்து விட்டால் சூள் உரை அது இல்லை; அழிவது தவிர்க்கலாம்' என்றான். மற்றொன்று நீ சூத்திர தாரி அழிவுக்கு நீ தயங்குவது இல்லை; ஆக்கல், படைத்தல் அழித்தல் இவை எல்லாம் உன்னைப் பொறுத்தவரை சமமான வை; ஏன் விளையாட்டு என்றும் கூறிவிடலாம்; உன்னைக் கட்டிப் போட்டால் எல்லாம் தீர்ந்து விடும்' என்று முடிவுரை கூறினான்.