பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 'என்னைக் கட்டு மாறு எங்ங்னம்?" என்று ஒரு கேள்வியை எழுப்பினான். 'அன்பினால் இறைவன் கட்டுப் படுவான்; நீ எங்கள் அன்புக்கு அடங்கியவன்; கட்டுப்படுத்த முடியும்' என்று வழி கூறினான். அவன் நாலும் தெரிந்தவன். ஞானம் உடையவன். "இருவரும் பேசியது வெளியில் கூற வேண்டாம்' என்று கண்ணன் கேட்டுக் கொண்டான்; அவன் அறிஞன். 'பாரதப் போரில் எங்களுக்கு நீ காப்பாக இருக்க வேண்டும்; இது நான் வேண்டுவது' என்று வேண்டுதல் தெரிவித்தான் அவன் நட்புக்கு இசைவு தந்தான் இறுதி வரை அவர்களுக்கு உதவுவதாக வாக்கு அளித்தான். அடுத்தது ஆர் அணங்கு திரெளபதியின் கருத்தைக் கிளரக் கண்ணன் நினைத்தான்