பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 'தருமன் கூறும் உரையே தக்கது. அமைதியே ஆக்கம் தரும்' என்று தான் கருதுவதாக அறிவித்தான். சீறி எழுந்தாள்; சினந்தாள்; 'கற்றைக் குழல் பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்த பார்வேந்தன் பற்றித் துகில் உரியப் பார்த்திபர் பார்த்திருந்தனர் அன்று என் மானம் யார் காத்தது? அன்று தெய்வம்தான் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. இன்று இந்தத் திறல்வீரர் ஊர் ஐந்து பெற்றுவிட்டால் அன்று விரித்த கூந்தல் முடிப்பது யார்? அழிந்து என் வாழ்வு முடிவது: அதுதான் இறுதி வழி' என்றாள். இறுதியில் கண்ணனின் இளவல் சாத்தகி உரை செய்தான்.