பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 177 'தண்டு இருந்தது இவன் கரத்தில், தனுசு இருந்தது அவன் கரத்தில்; வண்டு இருந்த பூங்குழல்மேல் மாசு இருந்தது என அவள் இருந்தாள்: கண்டு இருந்தீர் அனைவரும்: பண்டு இருந்த பகைவர் பால் ஊர் கேட்டு உண்டு இருந்து வாழ நினைப்பீர் இது தாழ்வு உமக்கு என்றான். அதற்குமேல் வாதங்கள் நிகழாவண்ணம் கண்ணன் முடித்துக் கொண்டான். வீர மகன் அபிமன்யு அவனைச் சுட்டிக் காட்டிச் "சோர்வு கொள்ளத் தேவை இல்லை' என்று திரெளபதிக்கு ஆறுதல் கூறிக் கண்ணன் வெளியேறினான். தூது செல்லுதல் கண்ணன் அத்தினாபுரி அடைந்தான்; துரியன் அவனுக்கு வரவேற்பு அளிக்க மறுத்தான்; கண்டும் காணாததுபோல் அவனைப் புறக்கணித்தான்.