பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வெள்ளைப் புடவைக்கு எங்கே போவது? இந்த வீரர்களை நம்பி எத்தனை குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன; இவர்களா தனக்குப் பகைவர்கள்?" எண்ணிப் பார்த்தான். அருச்சுனன் செயலற்றான். காண்டீபம் கைவிட்டு நெகிழ்ச்சி அடைந்தது. தளர்ந்து செயலிழந்த தனஞ்சயனுக்குத் தெளிவு தேவைப்பட்டது. படுகளத்தில் ஒப்பாரி வைத்து என்ன பயன்? போர் என்பது நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம். தனிமனிதன் வெறிச்செயலுக்கும் மானுடத்தின் நெறிமுறைக்கும் நடத்தும் தேர்வுக்களம். இரும்புப் பட்டரைக்கு வந்து கரும்பு கடித்துக் கொண்டு கைமுடக்குவது அறிவற்ற செயல்: