பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 சம்மட்டி எடுத்துச் சாத்தி நிமிர்த்துவது கொல்லனின் தொழில்: களம், போர்க்களம். 'சிவப்புப் பெறுகிறது" என்று சிந்தை செய்து கொண்டு இருக்க முடியாது. கண்ணன் அருச்சுனனுக்கு அறிவுரை கூறினான்; அது இனிய கீதம்; கீதை நன்மொழி அந்தக் களத்தில் உதயமானது. 'கடமை அதுதான் செய்யத் தக்கது; கர்த்தா தனிமனிதன் என்று கருதுவது மடமை; இந்த உலக இயக்கம் ஆரைச் சக்கரத்தின் சுழற்சி; அதில் நீ ஒரத்தில் அமர்ந்திருக்கும் சிறு துரும்பு. துரும்பு அந்த ஓட்டத்தில் அகப்பட்டுச் சுற்றுகிறது: தான் தான் சக்கரத்தைச் சுற்றுவது என்று எண்ணுவது அடிப்படையில் அறியாமை.