பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மாபெரும் பிரபஞ்சத்தில் நீ ஒரு பனித்துளி, தோன்றும் போதே மறைந்து விடுவது மனித வாழ்வு: அழிவு அதன் முடிவு. "இந்த உலகத்தை இயக்கும் இறைப் பொருள் காண்கின்ற பொருள் எல்லாம் கடவுள்' என்று கொண்டால்; கண்டால் பூரண ஞானம் ஒருவரிடம் தானாக அமையும். மனம் என்பது மாயை, அது சூழ்நிலைகளில் சிக்குண்டு சீரழிகிறது. விருப்பு வெறுப்பு இவை மனிதன் படைத்துக் கொள்பவை; இந்த உலகத்தில் அவை இயல்பாக அமைவது இல்லை. மனம் பேதலிக்கும்; அது வழி காட்டி அல்ல; அறிவு அதுதான் ஒளி.