பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விதவையாக்கி விட்டு அவன் மறைந்தான். சித்திராங்கதன் அவன் சரியாக வளர்க்கப்படவில்லை; காதல் விவகாரங்களில் கால் வைத்து வழுக்கி விழுந்து கொலை உண்டான்; காந்தருவன் ஒருவனுக்கு இவன் போட்டியாக இருந்தான்; அதனால் அவன் இவனைத் தீர்த்து விட்டான். இந்தக் குடிக்கு எஞ்சியது: ஒரே மகன்; விசித்திர வீரியன். அவனுக்குக் காசிநகரத்து அரசன் மகளிர் அம்பிகை, அம்பாலிகை இருவரைக் கொண்டுவந்து வீடுமன் தம்பிக்கு மணம் முடித்து வைத்தான். விசித்திர வீரியனும் நிரம்ப நாள் வாழவில்லை; அகால மரணம் அவனை அழைத்துச் சென்றுவிட்டது.