பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 சத்தியவதி புத்திசாலி: கீழ்நிலையில் இருந்து பதவிக்கு வந்தவள். இந்த மேல் மக்கள் இடும் சட்டம் சம்பிரதாயங்கள் அவளைத் தடைப்படுத்தவில்லை; அந்த வமிசத்துக்கு மகன் தேவை; என்ன செய்வது? வீடுமனைக் கேட்டுப் பார்த்தாள், அந்த விதவைகளுக்கு மறுவாழ்வு தரச்சொன்னாள். பெண்களைத் தொடாமல் இருந்த அவனுக்குப் பெண் என்றாலே தொடத்தகாதவர் என்று ஆகிவிட்டது. தனிநிலை அவனுக்குப் பிடித்து விட்டது: அதுமட்டும் அல்ல; வாக்குத் தவற அவன் விரும்பவில்லை; 'முடியாது' என்று அவன் மறுத்து விட்டான். பாரதக் கதை, யதார்த்த கதை: உண்மையை அவர்கள் மறைக்கவில்லை.