பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வியாசர்விருந்து. வியாசர் அவர் மகரிஷி, வேதங்களை வகுத்த ஞானி; கல்விக் கடல். அரசி சத்தியவதி அவரை அழைத்து ஒரு விருந்து வைத்தாள். அவர் அருந்த மறுக்கவில்லை. ஒரு பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வது அவள் பிறப்புரிமை. கணவன் இல்லை என்றால் அவள் உலர்ந்து சருகு ஆக வேண்டியது இல்லை. வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெறுதல் அவள் பிறந்ததன் பயன். மற்றும் கடமை உணர்வு ஒன்று உள்ளது; அந்த நாட்டுக்கு வாரிசு தேவை. சத்தியவதி அவள் அவர்களுக்கு அறிவுரை கூறி ஆயத்தப்படுத்தினாள்.