பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 செல்வச் சிறப்பு உள்ள மக்கள் சீர் பெறுவது இல்லை; அவர்கள் பொதுவாகப்பின்தங்குவது பழைய காலத்து இயல்பு. துரியன் தொடர்ந்து வீமனுக்குத் தொல்லைகள் தந்தான்; கொலை முயற்சிகள் பலசெய்து அவை தோல்வி பெற்றன. தருமன் அனைவரிலும் மூத்தவன்; அதனால் அவனுக்கு இளவரசு பட்டம் தரப்பட்டது. அதுதான் பகைக்கு வித்து ஆகி விருத்தி பெற்றது. துரியன் சூழ்ச்சி வாரண வாசி அந்நகருக்குத் தருமனை அனுப்புவது என்று துரியன் திட்டமிட்டான். துரியன் தந்தையைத் துளைத்து விட்டான்; அவனைத் தடுக்க முடியவில்லை; பாசத்துக்குத் தந்தை அடிமைப்பட்டான்; அதனால் நாசத்துக்கு அவன் துணைபோனான்; இது திருதராட்டிரன் தீயகுணம்.