பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 புரோசனன் ஓர் அமைச்சன் தருமனுக்குத் துணைவனாக அனுப்பப் பட்டான். அந்தப் புதிய நகரை ஆட்சி செய்யத் தருமன் அனுப்பப் பட்டான். தம்பியர் உடன் சென்றனர்; தாய் குந்தியையும் உடன் அழைத்துச் சென்றனர். அவன் அங்கு ஒர் அரக்கு மாளிகையைக் கட்டுவித்து அவர்களை அங்கே குடியிருக்க வைத்தான். இந்தச் சூழ்ச்சியை விதுரன் முன்கூட்டி அறிந்தான். அதை வீமனுக்கு எடுத்து உரைத்து வழி அனுப்பிவைத்தான். புரோசனனின் ஒவ்வொரு செயலையும் வீமன் கூர்ந்து கவனித்தான்; அவனை ஓர் இரவு தங்களோடு இருக்குமாறு வைத்துக் கொண்டான். நள்ளிரவு நணுகியது. எங்கும் அமைதி: