பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வீமன் எழுந்தான்; சகோதரர் நால்வரையும் தாய் குந்தியையும் விதுரன் ஏவலால் சிற்பி அமைத்துவைத்த சுருங்கை வழியே வெளியேற்றி அழைத்துச் சென்று தப்புவித்தான். வெளியேறியதும் அந்த அரக்கு மாளிகைக்குத் தீ வைத்தான் வீமன். அது பற்றி எரிந்தது. அந்தக் கொடியன் புரோசனன் கரிந்து செத்தான்; அவன் திட்டமிட்டுக் கொண்டு சென்று சேர்த்த குறவர் ஐவர் அவர்கள் தாய் ஒருத்தி அவர்களும் கரிந்து போயினர்; அவர்களைக் கொண்டு பாண்டவர்க்கு நஞ்சிட்டுக் கொல்லுவிக்கத் திட்டம் வகுத்து இருந்தான். இடும்பன் மரணம் பாண்டவர்கள் ஐவரும், தாய் அவளும்