பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பல் ஆய் விட்டனர்' என்ற செய்தியைப் பரப்பித் துரியன் இரங்கல் விழா எடுத்தான். 'பாண்டவர்கள் ஒழிந்தார்கள்' என்று உள்ளுக்குள் மகிழ்ந்து உற்சாகத்தோடு இருந்தான். உயிர் தப்பிய பாண்டவர் காடு மேடு திரிந்து இடும்பன் வனம் என்ற காடார்ந்த ஊரை அடைந்தனர். புதியவர்கள் வருகை அங்கே ஒரு பெண்ணுக்கு உவகை உண்டாக்கியது. இடும்பி என்பது அவள் பெயர்; அவள் இடுப்பு அழகி; உரல் போன்ற வடிவு: பருத்துத் திரண்ட தோள்கள்; பிடித்து வைத்த உருளைக் கிழங்கு எனக்கொழுகொழுத்து இருந்தாள்; அவள் தளதளர்த்த அழகு வீமனைக் கவர்ந்தது: அவளை இடுப்பழகி எனக் கொண்டான்.