பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 மகனுக்கு ஏற்றவள் என்றுகருதினாள்; சகோதரர் சரி என்று கூறினர். இடும்பியை அவன் மணந்து வாழ்ந்தான். முத்து ஒன்று அந்த நத்தை வயிற்றில் பின்னால் பிறந்தது; அவன் கடோற்கசன். பகனின் வதம் அடுத்தது அவர்கள் பயணம் வேத்தர கிரியம்; அது பார்ப்பனர் இருக்கை. பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு பஞ்சாங்கம் கையில் ஏந்திப் பார்ப்பன வீதியில் பழகிச் சிறிது காலம் கடத்தினர். அந்த ஊரில் பார்ப்பனி ஒருத்தி ஒப்பாரிவைத்து ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். யாரோ ஒருவர் கண்மூடிக் கொண்டார் என்று துக்கம் விசாரிக்கக் குந்தி சென்று கேட்டாள். அங்கே யாரும் செத்து மடியவில்லை; பின் ஏன்