பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இவர்கள் கத்தி அழுகிறார்கள்? அந்த ஊர் எல்லைக் கோடியில் ஏகாந்தமாக ஒரு அசுரன் இருந்தான். அவன் சாகபட்சினி அல்ல. மாமிசப் பட்சினி. புலால் உண்பவன். நாளைக்கு ஒருமுறைதான் உணவு உண்பான்; ஆனால் அவன் பசியார உண்பவன். அவன் எதிர்பட்ட ஆட்களைக் கொன்று குவித்துத் தின்று வந்தான்; அந்த ஊரார் அவனிடம் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். 'நாள் ஒன்றுக்கு வீடு ஒன்றாக ஒரு ஆளும் சமைத்த சோறும் அனுப்பிவைப்பது' என்று ஏற்பாடு ஆயிற்று, வீட்டு வாசல் பெருக்கும் முறை அந்த வாசலுக்கு அன்று வந்து சேர்ந்தது.