பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கணவனை அனுப்பிவைத்தால் அவள் சுமங்கலி, தாலி இழந்து அமங்கலி ஆகவேண்டிய அவலநிலை. மகன் வீட்டுக்கு ஒருவன்; எதிர்கால ஒளிவிளக்கு அவனை இழந்துவிட்டு அவர்கள் எப்படி வாழமுடியும்? மருமகன் வீட்டோடு இருந்தான்; அவனைத் தொலைத்து விட்டால் மகள் கதி? அவள்விதி? யாருக்காக அழுவது? என்பது அந்த வீட்டுப் பிரச்சனை, அதுகுறித்துச் சர்ச்சை வந்தது. "கவலைப் படாதீர்கள் என் இரண்டாவது மகன் வேளா வேளைக்கு வெற்றுச் சோறு சாப்பிடுகிறான்; எனக்கு ஐந்துபேர் பிள்ளைகள் ஒன்று போனால் எனக்குக் கவலை இல்லை; அவனை அனுப்புகிறேன்' என்று கவலை தீர்த்தாள் குந்தி.