பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒற்றை நாடிப் பார்ப்பனச் சிறுவன் செல்ல இருந்தான்; இன்று யானைக் குட்டி அனுப்பப்படுகிறது. ஊரவர் திரண்டனர். உப்புமா இட்லி கறி சோறு பலமாக இருந்தது; வண்டி ஒன்றில் ஏற்றி வீமனுக்குச் சீருடை உடுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கழுத்தில் பூமாலை போட்டு பலிக் களத்திற்கு அவனை அனுப்பி வைத்தனர். வேண்டுமென்றே அவன் காலம் கடத்தி வண்டியை நாற் புறச் சந்தியில் நிறுத்தி நரவாசனை அவனுக்கு எழுப்பி அவன் வரவுக்குக் காத்திருந்தான். இன்று புதிய உணவு கறி சோறு: பசிவேறு; வேகமாக வந்தான் இவன் அவனைச்