பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தீயவன்; அவன் தான் துரியோதனன், இரும்புக் கரம் அவன் கைகள்! வில்லெடுத்தால் அவன் திறமை அற்றவன் என்று தெரிந்து விடும். அதனால் அவன் சொல்லெடுத்து எதுவும் பேசாமல் சொகுசாக அங்கு அமர்ந்திருக்கிறான்' என்று அறிவித்தனர். அடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் சகுனி, 'சூழ்ச்சியில் சாணக்கியன்; நெருப்பை மூட்டுவதில் அவன் சக்கி முக்கிக் கல்; எப்பொழுதும் யாரை எப்படிக் கவிழ்ப்பது கீழே தள்ளுவது என்று சதிசெய்து கொண்டிருப்பவன்; மதிநுட்பம் மிக்க கயவன்; குள்ளநரி, அவன் பார்வை அழுத்தம் கொண்டது. பிறரை அழ வைப்பதில் வல்லவன். ஏணியில் ஏறச் சொல்லி இழுத்துத் தள்ளும் இயல்பினன். கோணங்கி, கொடியவன்' என்று அவனை அறிமுகப் படுத்தினர்,