பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அடுத்தது அசுவத்தாமன், 'பேச்சு அதிகம் பேசாதவன். அடக்கம் நிறைந்தவன்; மாவீரன்; அவசரமோ ஆவேசமோ அவன் அகராதியில் இல்லவே இல்லை. ஆனால் ஒன்று; அவன் அந்தணன் துரோணன் மகன்; பிறப்பால் பார்ப்பனன்; தொழில் சிறப்பால் வில்லாளி; அழகன்; எனினும் தீமைக்கு விலை போகும் எளியன். அடுத்தது அங்க தேசத்து அதிபதி கன்னன்; அவன் கரங்கள் கொடுத்துச் சிவந்தவை; தோள்கள் தினவு ஏறியவை: விழிகள் வீரத்தால் கொவ்வை இதழ்கள்: புகழ்ச்சி அவனுக்கு போதை, அந்த வகையில் பேதை ஏமாளியும் ஆவான் வள்ளல் என்று கூறி விட்டால் உள்ளவை எல்லாம் வாரிக் கொடுத்துவிடுவான்;