பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அவனுக்கு உள்ள குறை வீண் பெருமை, அவசரப்படுவான்; அதி ஆவேசம் கொள்வான். துரியனின் உயிர்நண்பன்: நன்றி மறவாத நல்லோன்' என்று நாநயம்படப்பேசினர்; பலராமனும் கண்ணனும் அடுத்து அறிமுகம் செய்யப் பட்டனர். 'வசுதேவன் குமரன் பலராமன் அவன் திருப்பெயர்; நீலநிற ஆடையன் கலப்பைப் படையன்; வீண் வம்புக்குப் போக மாட்டான்; வந்த வம்பை எளிதில் விடமாட்டான், தகைமையாளன். கண்ணன் அவன் தம்பி ஆவான்: ஆயர் சேரியில் பிறந்து வளர்ந்தவன்; கம்சனைக் கொன்று துமிசம் செய்தவன். சத்திய பாமையைக் காதலித்து மணந்தவன்;