பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 அவன் இங்குப் போட்டிக்கு வந்தவன் அல்லன்; அவைக்கு விருந்தின்ன்' என்று அறிமுகம் செய்தனர். திட்டத் துய்மன் அரங்கில் ஏறி நின்றான், விதிகளைப் படித்தான். 'அம்பிட்டு இலக்கினை வீழ்த்தும் இளைஞனுக்கே துருபதன் மகள் உரியள்' என்று அறிவிப்புச் செய்தான். மேலே மீன் வடிவில் இருந்தது இலக்கு அதைச் சுற்றி வந்த ஆரைகள் வளைப்பு: அது சக்கரம் போன்றது. அதைப் பற்றிய விளக்கமும் உரைத்தான். யானைபோன்ற அரசர்கள் எழுந்து வில்லெடுத்து நாண்பூட்ட முயன்றனர்; இயலாமல் சோற்றுப்பானைபோல உருண்டு விழுந்தனர். துரியன் எழுந்தான் அனைவர் விழிகளும் அவனையே வளைத்தன.