பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வில்லெடுத்தவன் நாண்பூட்ட முடியாமல் நாணித் தலைசாய்ந்தான்; ஆரவாரம் எதுவும் பெறாமல் இருப்பிடம் அமர்ந்தான். சிங்கக் குட்டி எனச் சீறி எழுந்த கன்னன் நிச்சயம் தனக்கு வெற்றி என்று நிமிர்ந்து நடந்தான். அவசரப் பட்டான், வில்லின் காம்பினை வளைத்தான்; நாணைப் பூட்டினான்; அந்தக் காம்பு வளைவு நிமிர்ந்து அவன் தலைமுடியைத் தரையில் தாழ்த்தியது. அரிய முயற்சி; மயிர் இழையில் நாண் பூட்ட முடியாமல் அது அவனுக்கு முரண் செய்தது; தோல்வி அடைந்தான். 'கார்த்திகைக்குப் பின்னால் மழை இல்லை; கன்னனுக்குப் பின்னால் கொடை இல்லை' இந்தப் பழமொழிதான் எங்கும் அவர்களால் பேசப்பட்டது.