பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறு என்றால் அதைச் சுட்டிக் காட்டுவதையே விரும்பு கின்றனர். இன்று மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் அதீத செயல்களை எதிர்பார்க்கவில்லை. புதுக்கவிதை என்பது இன்றைய புதிய வடிவம். உரை நடையே கவிதை வடிவில் தரப்படுகின்ற ஒன்று. கவிதைக்கு உரிய ஓசையும், உரைநடைக்கு உரிய தெளிவும் அமைந்தது. மிகைபடக் கூறுதல், உயர்வு நவிற்சி இதில் காணமுடியாது. கூறுவதில் இயன்றவரை நம்பகத் தன்மை இதன் உள்ளடக்கம். சுவைபட இலக்கிய நயம் அமைய எழுதப் பட்டுள்ளது. இது புதிய வார்ப்பு: புதுக்கவிதை பழங்காவியத்தை எழுதப் பயன்பட்டு உள்ளது; புதிய முயற்சி; எழுத்தில் ஒரு புது மலர்ச்சி. - ரா. சீனிவாசன்