பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வரவு செலவு கணக்கு பொருள் குவியலுக்கு அவன் அறநிலைக் காவலன், அதனால் அது அவனைப் பொறாமைக்காரன் ஆக்கியது. கன்னனிடம் மானியத் துறை வழங்கப்பட்டது: வாரிக் கொடுப்பதில் அவன் மேகத்தை வென்றவன்; கொடுத்து அவன் கரங்கள் காழ்ப்புக் கொண்டவை; அது அவனைப் பெருமைப்படுத்தியது; விழாவில் சில சிறு நிகழ்ச்சிகள் பத்திரிகைக்காரர்கள் எழுதினர்; சரிவுகளை எழுவதில் அவர்கள் என்றும் சமர்த்தர்; தரை என்று நினைத்து நீர்த்திரையில் துரியன் தடுக்கி விழுந்தான்; நீர் என்று நினைத்து நிலத்தில் முட்டிக் கொண்டு இடறி இடர்ப்பட்டான்; பளிங்குக் கட்டிடம் அது நிலைக் கண்ணாடியாக எங்கும் திகழ்ந்தது.