பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சும்மா இருக்கக் கூடாதா? 'களுக்' என்று சிரித்துவிட்டாள். அது 'சுருக் கென்று துரியனைத் தைத்தது: திரெளபதி செய்த தவறு அது. 3. சூது போர் 'நேற்று வடை சுட்டு விற்றவன்; இன்று வாடகைக் கார் விட்டுக் கோடிக் கணக்கில் குவிக்கிறான்' இது எளியவன் ஒருவன் ஏற்றம் அடைந்தால் துற்றிப் பேசும் பேச்சு. குப்பத்தில் அவர்கள் கோழி மேய்ப்பார்கள் என்று துரியன் எதிர்பார்த்தான்; அவன் தெப்பம்விட்டுத் தேர்விழா நடத்தினான். இதை இந்தச் சுப்பனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவசரக் கூட்டம் கூட்டித் தன்பொருமலைத் துரியன் வெளியிட்டான்;